Friday, September 19, 2008

kanner anjali - காதலுக்கு கண்ணீர் அஞ்சலி -ps kavithaikal







சிரித்து பேசி
சிணுங்கியதும்
சில்லென துவங்கிய என் காதல்
சிறகிழந்த பறவையாய் இன்று!

என் வாழ்வில் ஆச்சரிய குறியாய் இருந்து
பின் கேள்வி
குறியாய் மாறிய காதலுக்கு
நேற்று வைத்து விட்டேன் முற்று புள்ளி.

காதல் மாயையா இல்லை
எது காதல் என்ற அறியாமையா?

காதலை கொன்ற
கொலை காரி அவள்

இ.பி.கோ வில் இடமில்லையாம்
இரக்க மற்றவளை தண்டிக்க!!

கோபம் இல்லை
பாவமாய் இருக்கிறது அவளை பார்த்தால்…

இதயம் இல்லாதவள் அவள்
இரக்கத்தை எதிர்பார்த்தது என் தவறு

மனிதாபிமானம் உள்ளவன் நான்
மன்னித்து விடுகிறேன் அவளை

வாழ்த்துகிறேன் அவள் வாழ்வு சிறக்க!!


தோல்விதான் எனினும்
சோகமில் லை
சுமை நீங்கியதால்
சுகமே

நேற்று அகால மரணமடைந்த
என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி

என் கடந்த காதல் பயணம்
கடும் தோல்வியில் முடிந்தது
அடுத்த பயணம்
அபார வெற்றி பெற வேண்டிகொள்ளுங்கள்
அவரவர் இஷ்ட தெய்வங்களை

இப்படிக்கு,
நான்

*Book mark this site for more tamil poems , Updating every week!!!