
நான் யார்?
கவிதைகள் புனைவதால் கவிஞ னா?
காதல் புரிவதால் காதலனா?
மனிதனாய் நன்றாக நடிப்பதால் நடிகனா?
ஆசைக்கு அடிமையானதால் மிருகமா?
குழப்பமான கேள்விக்கு
விளக்கமாக விடை தேடினேன்…
இறுதியில் தெரிந்து கொண்டேன்
இறைவன் நானென்று
ஆணவக்காரன் என அவமதித்தாலும்
பைத்திய காரன் என பரிந்துரை செய்தாலும்
பயப்பட மாட்டேன்…
மதிக்க மாட்டேன்
மதி கெட்டோர் வார்த்தைகளை…..
முடிந்தால்
முயற்சி த்து பாருங்கள்
கிடைத்தாலும் கிடைக்கலாம்
உங்களுக்கும் அந்த இறைவனை……….
*Book mark this site for more tamil poems , Updating every week!!!
No comments:
Post a Comment